முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

11ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து!

11ம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, 10ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. அதில், ஏதேனும் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 10 முதல் 15% வரை மட்டுமே மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

ஒருவேளை மிக அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், பள்ளி அளவில் தேர்வு வைத்து மாணவர்களை அனுமதிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை வெளிட்ட நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த காரணத்தால், பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற முந்தைய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வாபஸ் பெற்றுள்ளது. மேலும், 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 11ம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை கடந்தது!

Dhamotharan

பிஸ்பிபி பள்ளியில் மற்றொரு ஆசிரியர் கைது!

கேந்திரிய வித்யாலயா தமிழ் ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Nandhakumar