முக்கியச் செய்திகள் தமிழகம்

வன்னியர்களுக்கு 20% ஒதுக்கீடு: பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் 3ம் கட்ட ஆலோசனை!

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் மூன்றாம் கட்டமாக ஆலோசனை நடத்தினர்.

அதிமுக. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 3ம் கட்டமாக பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோருடன், பாமக தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர்கள் பாலு, தன்ராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

Advertisement:
SHARE

Related posts

சோளக்காட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுப்பு

Saravana Kumar

காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

Gayathri Venkatesan

ஜோ ரூட் அரைசதம்: 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து

Gayathri Venkatesan

Leave a Reply