தலைநகர் டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை : விவசாய சங்கங்ள்

டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களுக்கு மேலாக போராட்டி வரும் விவசாயிகள், டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம்…

டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களுக்கு மேலாக போராட்டி வரும் விவசாயிகள், டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. எனினும், நாட்டின் பிற பகுதிகளில் ஏற்கனவே அறிவித்தபடி, மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply