நடிகர் சங்கக் கட்டடம் கட்ட ரூ.1 கோடி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலில் பிரமாண்டமான கட்டடம் கட்ட…

நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலில் பிரமாண்டமான கட்டடம் கட்ட முடிவு செய்தது.  தியாகராய நகர் அருகே இந்த கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த கட்டடத்தை கட்ட நிதி திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை இன்று வழங்கினார்.  நடிகர் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர் என்ற முறையில் நிதியுதவி வழங்கியதாக  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு,  நடிகர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.