அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அமைச்சர் தங்கமணி தேர்தல் பரப்புரை

குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில், அமைச்சர் தங்கமணி, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 3 வது முறையாக அதிமுக சார்பில் அமைச்சர் தங்கமணி…

குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில், அமைச்சர் தங்கமணி, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 3 வது முறையாக அதிமுக சார்பில் அமைச்சர் தங்கமணி களமிறங்கியுள்ளார். இதையொட்டி, அவர், குமாரப்பாளையம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டும் ஆதரவு திரட்டி வருகிறார். பள்ளிபாளையம் நகராட்சியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் தங்கமணி, தொடர்ந்து காவிரி சாலை, டிவிஎஸ் மேடு, ஜீவாசெட்டு, ஆண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று அமைச்சர் தங்கமணி ஆதரவு திரட்டினார். அப்போது, பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.