தியேட்டர்கள் திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு : மு.பெ.சாமிநாதன்

திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். திரைத்துறை மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று…

திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திரைத்துறை மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், படப்பிடிப்பில் குறைந்தது 150 பேராவது கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்ததாகக் கூறினார். திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் எனவும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.