மின்வெட்டு இல்லாத, சீரான மின் விநிநோகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் ஒருலட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பேசிய விவசாயிகள், தாங்கள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து நீண்ட ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், திமுக அரசு வந்த பிறகுதான் மின் இணைப்பு கிடைத்துள்ளதாகவும் பேசினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி பேசும்போது, கருணாநிதியைப் போன்றே விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி 4 மாதத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்வில் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் துறைக்கு 78,000 புகார்கள் வந்துள்ளன. அதில், 72, 000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது கூடுதல்” என்று தெரிவித்தார். மின்வெட்டு இல்லாத, சீரான மின் விநிநோகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.