கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய நிலையில், அதனைத் தொடர்ந்து இராமராயர் மண்டபத்தில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தண்ணீரை பீய்ச்சியடித்து கள்ளழகரை வரவேற்றனர்.
கள்ளழகருக்காக கருப்பசாமி வேடமணிந்த பக்தர்கள் விரதமிருந்து ஆட்டு தோல் பையில் தண்ணீரை சேகரித்து கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். தங்கை மீனாட்சியின் திருமணதிற்கு கள்ளழகர் வரும் நிலையில் அவர் வரும் முன்பே திருமணம் நடைபெற்றுவிடுவதால் கோபத்தில் திரும்பும் கள்ளழகரின் மனதை குளிர்விக்கும் விதமாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவதாக மக்கள் நம்பிக்கை.
இந்நிகழ்வினை தொடர்ந்து மாலை வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருள்கிறார். நாளை காலை தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க உள்ளார். நாளை இரவு இராமராயர் மண்டபபடியில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.







