முக்கியச் செய்திகள் இந்தியா

ராஜ்நாத் சிங் விளக்கம்: “ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை”-விமானப்படை

ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் என மொத்தம் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விபத்து நடத்த பகுதி

இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய விமானப்படையின் பயிற்சிக் கட்டளைத் தளபதி ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்த விபத்து குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் ஆற்றிய உரை: “பகல் 12.15 மணிக்கு ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால், 12.08க்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் மௌன அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள்

இந்த விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏர் மார்ஷல் சவுத்ரி நேற்றிரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளார். விபத்து குறித்து முப்படை விசாரணை மேற்கொள்ளப்படும்.

மக்களவையில் மௌன அஞ்சலி செலுத்திய உறுப்பினர்கள்

13 ராணுவ வீரர்களின் உடல்களும் இந்திய விமானப்படையின் தனி விமானங்கள் மூலம் டெல்லி கொண்டுவரப்படும். முழு ராணுவ மரியாதையுடன் ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீண்ட நாள் கனவு நிறைவேறியது: சமந்தா நெகிழ்ச்சி!

Gayathri Venkatesan

கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 509 பேர் உயிரிழப்பு

Halley Karthik

குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை

Web Editor