வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னை தியாகராய நகரில் வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகர்…

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்

சென்னை தியாகராய நகரில் வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆன்லைன் பதிவு நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமிக்கும் பணி விரைவில் நடைபெறும் என்றார்.

மேலும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் விலை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மளிகை பொருட்களை வாங்கும்போது போலியான பில் வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பொருட்களை விற்பனை செய்யாமல் பில் மட்டும் போட்டு வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.