கொரோனா 3வது அலை வீரியமாக இருக்காது: ஆய்வில் தகவல்

கொரோனா 3வது அலை இரண்டாவது அலையைப் போல கடுமையாக இருக்காது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும்  ஏப்ரல் – மே மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2வது அலை பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. இன்னும் சில மாதங்களில் 3வது அலை…

கொரோனா 3வது அலை இரண்டாவது அலையைப் போல கடுமையாக இருக்காது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும்  ஏப்ரல் – மே மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2வது அலை பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. இன்னும் சில மாதங்களில் 3வது அலை வரலாம் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 3வது அலையின் பாதிப்பு முதல் மற்றும் 2ம் அலைகளை விட கடுமையாக இருக்கும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. 

 இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் லண்டனைச் சேர்ந்த இம்பிரீயல் கல்லூரி ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக் குழுவில் ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா, சந்தீப் மண்டல் உள்ளிட்ட  தொற்றுநோயியல் வல்லுனர்களும், லண்டன் இம்பிரீயல் கல்லூரி தொற்று நோய் வல்லுனர்களும் இடம்பெற்றிருந்தனர்.  கணித மாதிரி பகுப்பாய் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் கொரோனா 3வது அலை ஒரு  நம்பகத்தன்மை; கணித மாதிரி அடிப்படையிலான பகுப்பாய்வு என தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவு,  இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  “கொரோனா 3வது அலை இரண்டாவது அலை போல கடுமையாக இருக்காது. தற்போது முழு வீச்சில் போடப்படும் தடுப்பூசி என்பது  தற்போதைய மற்றும் 3வது அலையின் பாதிப்பை வெகுவாக குறைக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.