கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்
எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீட்டு வசதி வாரிய துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வான உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சி.எம்.டி.ஏ-விற்கு தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், காலியிடங்களை நிரப்புவதன் மூலம் சி.எம்.டி.ஏ ஊழியர்களின் பணிச்சுமை குறையும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சி.எம்.டி.ஏ வை அணுகும் யாராக இருந்தாலும் கட்டிட வரைபடம் இருந்தால் 60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.







