ஏலகிரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல்: அமைச்சர் மெய்யநாதன்

ஏலகிரி மலைப்பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் தொகுதியில் வருவாய் வட்டம்…

ஏலகிரி மலைப்பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் தொகுதியில் வருவாய் வட்டம் வாரியாக விளையாட்டு மைதானம் அமைக்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளை யாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு முன் கூட்டியே ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய அரசு, தமிழ்நாடு அரசு என்றார்.

முன்பே அறிவித்ததை போல், வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

மேலும், மாநிலத்தில் உள்ள விளையாட்டு கட்டமைப்புகளை உலகத்தரத்திலான கட்டமைப் புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தின் தலைநகரங்களில் திறந்தவெளி, உள் விளையாட்டரங்கம், நீச்சல் குளம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

ஏலகிரி மலைப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள் விளையாட்டரங்கம் அமைக்க 4 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

அதே போல், திருப்பத்தூர் தொகுதியில், தேவையான இடம் கண்டறியப்பட்டு தெரிவிக்கப் பட்டால் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.