முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,12,16,337அதிகரித்துள்ளது. தற்போது 4,07,170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,03,90,687 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஷ் கைலாஷ் சந்தித்தார். அப்போது, சென்னையில் உள்ள மருத்துவ கட்டமைப்பு குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி செலுத்துவதில் 2 கோடியை நெருங்கி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று மாலை 5 லட்சம் தடுப்பூசி சென்னை வரவுள்ளதாக கூறிய அவர், இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்றும் தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement:

Related posts

தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது: பிரியங்கா காந்தி விமர்சனம்

Halley karthi

Aprilia SXR 160 ஸ்கூட்டரின் முன்பதிவு தொடக்கம்; இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Jayapriya

மத்திய அமைச்சருடன் தமிழ்நாடு அரசியல் கட்சி பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

Jeba Arul Robinson