முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி அதகப்பாடியில் அமைந்துள்ள ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, அங்கு அமைந்துள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, குளோரின் அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும், அங்குள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா எனவும் அவர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள நீர் ஏற்றும் நிலையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்ட அமைச்சர், பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சணாமூர்த்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஒய்.பிரகாஷ் (ஒசூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

சென்னைக்கு 4 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

Gayathri Venkatesan

கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!

Ezhilarasan

உள்ளாட்சி தேர்தலில் இந்த கட்சிகளோடு கூட்டணி இல்லை – கமல் திட்டவட்டம்

Halley karthi