முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பியில் கொரோனா கப்பா வேரியன்ட் வைரஸ் பாதிப்பு

மிகவும் ஆபத்தான கப்பா வகை வேரியன்ட் உத்தரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியைக் கடந்துள்ள நிலையில் தற்போது டெல்டா பிளஸ் மற்றும், கோப்பா வகை வேரியன்ட் வைரஸ்கள் புதிய அச்சுறுத்தலாக உள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில், இருவருக்கு இந்த கோப்பா வரை வேரியன்ட் வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 107 டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்புள் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த பாதிப்புகளை மேலும் கண்டறிய அதிக மரபணு வரிசைமுறை பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக உ.பி முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இதற்கு சிகிச்சை சாத்தியம் என்றும் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். இத்துடன் ஆல்ஃபா வேரியன்ட்,டெல்டா வேரியன்ட் போன்ற வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்த பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 4,05,939 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 911 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

காய்ச்சலுக்கு ஊசி போட்டு கொண்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

6 நிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு!

Ezhilarasan

பரூக் அப்துல்லா சொத்துக்கள் முடக்கம்!

Niruban Chakkaaravarthi