முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் இதுவரை 472 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான இணையப் பக்கத்தை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மே மாதம் 7-ம் தேதிக்கு பின் பெறப்பட்ட நிதிகளை கொரோனா நிதியாக அடையாளப்படுத்தி, நிதி கணக்கை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
ஜனநாயகத்தில் அரசின் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம் என தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து விவகாரங்களையும் கணினிமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.