வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த நிலையில், அந்த அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இடம் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சொத்து சேர்த்ததாக, 2012-ல் அதிமுக ஆட்சியில் இருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, தொழிலதிபர் செண்பகமூர்த்தி ஆகியோரை விடுவித்து இன்று தீர்ப்பளித்தது.







