தமிழகம்

“அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைக்கிறார்” – கடம்பூர் ராஜூ குற்றச் சாட்டு

அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலை அதிமுக முழுவீச்சில் எதிர்கொண்டு வருகிறது. அதையடுத்து சசிகலா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக மக்கள் பலத்தை நம்புகிறது. அதனால், மற்றவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார் என ஸ்டாலினை விமர்சித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!

நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை

Saravana Kumar

அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ராமதாஸ் நம்பிக்கை!

Gayathri Venkatesan

Leave a Reply