செல்லூர் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை : கனிமொழி

மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைப்பது கனவாக மட்டுமே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செல்லூர் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.…

மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைப்பது கனவாக மட்டுமே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செல்லூர் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார். மதுரையின் வளர்ச்சிக்காக திமுக ஆட்சி காலத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கனிமொழி கூறினார்.

மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என தெரிவித்த அவர், ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply