”சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது”- அமைச்சர் ஜெயக்குமார்!

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை – கெவாடியா இடையேயான சிறப்பு விரைவு ரயிலை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்…

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை – கெவாடியா இடையேயான சிறப்பு விரைவு ரயிலை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா வருகையால் அதிமுகவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றார்.

மேலும், சசிகலா விடுதலை ஆன பின்பு, அதிமுக நிர்வாகிகள் அவரை சந்திக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக நிர்வாகிகள் யாரும் குழந்தைகள் கிடையாது, ஆகவே எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை அதிமுக பெரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதனையடுத்து மாநில முதலமைச்சரின் டெல்லி செல்வதாகவும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply