முக்கியச் செய்திகள் இந்தியா

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் நேற்று முன்தினமான 16-01-2021 முதல், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 16 மற்றும் 17 தேதிகளில் மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 16ம் தேதி மட்டும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 229 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 17-01-2021 ஞாயிற்று கிழமை என்பதால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதனால் நேற்று மட்டும் இந்திய அளவில் 17 ஆயிரத்து 702 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்சனைகள் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதியக் கட்டுப்பாடுகள்-எவற்றுக்கெல்லாம் அனுமதி; முழு விவரம்

Halley Karthik

பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலி

Web Editor

வெனிசுலாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு

EZHILARASAN D

Leave a Reply