டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மார்ச் 20-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து மணீஷ் சிசோடியா, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மணீஷ் சிசோடியாவின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவிந்தர் சர்மா, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு தேவிந்தர் சர்மா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையும் தேவிந்தர் சர்மாவிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.