உத்தரகாண்டில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2022-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டேராடூனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், 24 மணி நேரம் மின்சாரம் வழங்குவது எளிதல்ல என்றாலும், அதை நிச்சயம் செய்வோம் என்றும் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான உத்தரகாண்ட் அரசை டெல்லி அரசுடன் ஒப்பிடுகையில், உத்தரகாண்ட் மாநிலம் டெல்லியை விட 70 வருடம் பின்தங்கியுள்ளதாகவும், கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மேலும், இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், டெல்லியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்றாலும் பிற மாநிலங்களில் இருந்து வாங்கி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் போது, உத்தரகாண்ட் மக்களுக்கு ஏன் இலவச மின்சாரம் கிடைப்பதில்லை?, என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.







