முக்கியச் செய்திகள் இந்தியா

“டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயிகளே அல்ல…” – மத்திய அமைச்சர்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் அல்ல, வன்முறையாளர்கள் என மத்திய அமைச்சர் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து இன்று (ஜூலை 22) தொடங்கும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், “இந்தை மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். ஏற்கெனவே இந்த சட்டங்கள் குறித்து நாம் விவாதித்துள்ளோம். சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து விவசாயிகள் விளக்குவார்கள் எனில் மத்திய அரசு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது.” என போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்ந நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் அல்ல, வன்முறையாளர்கள் என வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பண்பாட்டுத்துறை மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி விமர்சித்துள்ளார். மேலும், “இவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் கடந்த ஜனவரி 26ல் வன்முறை வெட்கக்கேடான சம்பவம் அரங்கேறியது. எதிர்க்கட்சியினர் இதனை பெரிதாக்குகின்றனர்.” என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியிருந்த நிலையில், மத்திய இணை அமைச்சரின் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

Halley karthi

மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் நடிகைகள் குஷ்பு கௌதமி ட்விட்

Jeba Arul Robinson

மாஞ்சோலை நினைவு தினம்: அரசியல் கட்சியினர் தாமிரபரணி நதியில் அஞ்சலி

Jeba Arul Robinson