மிக்ஜாம் புயல் எதிரொலி – புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!

சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை கடும் பாதிப்பிற்குள்ளானது. கடந்த டிச. 3, 4 ஆம் தேதி…

சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை கடும் பாதிப்பிற்குள்ளானது. கடந்த டிச. 3, 4 ஆம் தேதி பெய்த மழையால் இன்னும் சென்னையின் சில பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையின் பிரதானமான புழல் ஏரி நிரம்பி அதன் கரை உடையும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!

இந்த நிலையில், புழல் ஏரி பாதுகாப்பாகவே உள்ளது என தமிழ்நாடு நீர்வளத்துறை செயற்பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் புழல் ஏரியை இன்று பார்வையிட்டனர்.

மேலும், அமைச்சர்கள் ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர். இன்று (டிச.7) காலை 6 மணி நிலவரப்படி, ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது.  மேலும், ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கனஅடியாக உள்ளது.  தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.