பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வசதியை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு பேருந்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆனந்தாவாடி கிராமத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பேருந்து வசதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார்.
அமைச்சர் பேருந்து ஓட்டிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சர் பேருந்தை ஓட்டும் வீடியோவில், பொதுமக்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்கின்றனர்.மேலும் அமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.







