முக்கியச் செய்திகள் சினிமா

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் பட ஷூட்டிங் எப்போது?

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை தொடங்கினார். இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா காரணமாக, மீண்டும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஷூட்டிங் தொடங்கப்படாத நிலையில், ஷங்கர் தெலுங்கு ஹீரோ ராம் சரண், இந்தி ஹீரோ ரன்வீர் சிங் ஆகியோர் நடிக்கும் படங்களை இயக்க ஒப்பந்த மானார்.

இதற்கிடையே ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், மற்ற படங்களைத் தொடங்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட கோரி லைகா, வழக்குத் தொடர்ந்தது. விசாரித்த நீதிபதி, ஷங்கருக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டார்.

இந்த தீர்ப்பை அடுத்து இயக்குநர் ஷங்கர், தனது அடுத்த படத்தின் பணிகளில் மும்முரமாகி விட்டார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கரை தயாரிப்பாளர் தில் ராஜூ, ராம் சரண் ஆகியோர் நேற்று சென்னையில் சந்தித்தனர். அப்போது படப்பிடிப்பை எப்போது தொடங்குவது என்பது உள்ளிட்ட விவரங்களை அவர்கள் பேசியதாகவும் செப்டம்பர் மாதம் ஷூட்டிங்கை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

பாதுகாப்புப் படையினர் அதிரடி; 5 தீவிரவாதிகள் உயிரிழப்பு

Halley Karthik

15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

Vandhana

IND VS ENG; சதம் விளாசி அசத்திய ரோகித் சர்மா

Saravana Kumar