விவசாயி என்பதால் முதல்வர் மீது மு.க.ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி : அமைச்சர் பாண்டியராஜன்!

விவசாயி என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.…

விவசாயி என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், அவரது முன்னிலையில் ஆவடி மாநகர் ரஜினி மக்கள் மன்ற மாநகர் செயலாளர் ஜான் காந்தி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில் “மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய முதல்வராக 5 ஆண்டு வெற்றிகரமாக ஆட்சி நடப்பதற்கு அடித்தளம் இட்டவர் எடப்பாடியார், அடிப்படையில் அவர் ஒரு விவசாயி என்பதால் ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் மீது ஒரு காழ்புணர்ச்சி இருக்கிறது. பெரும்புள்ளி யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.