தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தருமபுரி வழியாக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்று கொண்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது காரிமங்கலம் அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழிக்கு திடீரென அஜீரண கோளாறு ஏற்பட்டதால் காரிமங்கலத்தில் உள்ள
தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்து கிருஷ்ணகிரியில் அரசு நிகழ்வில் இருந்த போக்குவரத்து துறை
அமைச்சர் சிவசங்கர் மற்றும் உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தருமபுரி
கிருஷ்ணகிரி திமுக நிர்வாகிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர்
மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கேஸ்ட்ரிக் பிரச்சனை என தெரிவித்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பிறகு மருத்துவரின் பரிந்துரை படி அவர் பெங்களூரில் உள்ள நாராயணா இருதாலயா தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காரில் சென்றார்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அமைச்சர் அன்பில் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். பரிசோதனைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு சென்றுள்ள
அமைச்சர் அன்பில் மகேஸுடன் இரு அமைச்சர்கள் மற்றும் திமுக
நிர்வாகிககள் உடன் சென்றனர்.