உலக யானைகள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 1160 என்ற நிலையில் உள்ளது.
எனவே யானைகள் தினத்தில் யானைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டி உள்ளது. இச்செய்திக்குறிப்பு பல்வேறு காரணங்களால் யானைகள் கொல்லப்பட்டுள்ளதையும், இந்தியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையையும் விவரிக்கிறது.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017-ல் 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நான்கு பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில், அதாவது 2477 யானைகளை கொண்டுள்ளது என அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
https://twitter.com/mkstalin/status/1690224671248338944
இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பிரமாண்ட உருவம் கொண்டுள்ளபோதும் சாதுவான விலங்காக காணப்படும் யானை, மனிதர்களிடம் நீண்ட நெடிய வரலாற்று தொடர்பை உடையது.







