உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு ஆவினுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி 1லட்சத்து36 ஆயிரம்…

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அரசு ஆவினுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி 1லட்சத்து36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.இதர பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்தமாக ஒருநாளைக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் ஆவின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கிட்டதட்ட 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் ஆவினையே நம்பி உள்ளனர்.இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை 7 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 17 ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக செல்லம்பட்டி-சக்கரைப்பட்டி சாலையில்
பல லிட்டர் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.