ஒளவையார் கோவிலின் 49ஆம் ஆண்டு திருவிழா!

வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவிலின் 49 ஆம் ஆண்டு திருவிழாவில்,  மும்மதத்தினரும் பங்கேற்றனா். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக  தமிழ் புலவர் ஒளவையாருக்கு என்று  தனி கோவில் உள்ளது.…

வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவிலின் 49 ஆம் ஆண்டு திருவிழாவில்,  மும்மதத்தினரும் பங்கேற்றனா்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக  தமிழ் புலவர் ஒளவையாருக்கு என்று  தனி கோவில் உள்ளது.

இக்கோவிலின் 49 ஆம் ஆண்டு திருவிழா தமிழ் நாடு அரசு சார்பில்  விழாவாக நடைபெற்றது. இதையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஒளவையார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும்  மலர் அலங்காரம் செய்தாா்.

பின்னா் பள்ளிக்கூட மாணவர்களுக்கு இடையே  நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு  பரிசுகள் வழங்கினாா். மேலும் ஒளவையாருக்கு 18 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் எனவும்  தெரிவித்தார்.

இவ்விழாவில் மாணவிகள் ஔவையார் வேடமிட்டு  பாடல்களை பாடியது பார்ப்போரை கவர்ந்தது.  பல்வேறு கிராமியக்கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்ற இவ்விழாவில்  இந்து, முஸ்லீம்,  கிறிஸ்துவர் என மும்மதத்தினரும்  கலந்து கொண்டனர்.

— கா.ரு்பி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.