இங்கிலாந்தில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மூன்று வீரர்கள் பலி…!

இங்கிலாந்து நாட்டில் இன்று பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் டெவோன் பகுதியில் அந்நாட்டு இராணுவம் இன்று பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் “ஜூன் 3, புதன்கிழமை அன்று, டெவோனில் உள்ள சோர்டன் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் பயிற்சி ஒன்றின்போது, ​​ராயல் நேவியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம்.

உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விவரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பு சிறிது அவகாசம் கோரியுள்ளனர். இந்தத் துயரமான நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது எண்ணங்களும் அனுதாபங்களும் உரித்தாகின்றன” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.