முக்கியச் செய்திகள் விளையாட்டு

SRH VS RCB: இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

இன்றைய ஐபிஎல் போட்டியின் 6வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே இன்று இரவு 07:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையை வென்று வெற்றியுடன் தொடங்கியது. அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த 11ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் ஜோனி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரித்திமான் சஹா இந்த முறை தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். இருப்பினும் அவர் 7 ரன்னில் வெளியேறினார். கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோ கடந்த போட்டியில் நான்காவது இடத்தில் களமிறகப்பட்டார். சஹா கடந்த போட்டியில் தொடக்க வீரராக ஜொலிக்காத காரணததால் இன்றைய போட்டியில், மீண்டும் பேர்ஸ்டோவ் மற்றும் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரு அணி வீரர் தேவ்தத் படிக்கல் இன்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அவரின் வருகை பெங்களூரு அணிக்கு ஒரு பிளஸ் பாய்ண்டாகவே பார்க்கப்படுகிறது.
ஐதராபாத்தை ஒப்பிடுகையில் பெங்களூரு அணி சுழற் பந்துவீச்சில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. ஆர்சிபி ஸ்பின்னர் சாஹல் தற்போது பாமில் இல்லை. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஒரு விக்கெட்டுகளைக்கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இன்றைய போட்டியில் அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே ஆர்.சி.பி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் இரண்டாவது இன்னிங்ஸின் போது ரன் சேஸ் செய்வதற்கு மிக கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு பனி ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். அதனால், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ய வாய்ப்புள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்களின் உத்தேச பட்டியல்

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், விஜய் சங்கர், அப்துல் சமத், முகமது நபி, ரஷீத் கான், நடராஜன், சந்தீப் சர்மா மற்றும் புவனேஷ்வர் குமார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்களின் உத்தேச பட்டியல்

தேவதூத் பாடிக்கல் , விராட் கோலி (கேப்டன்), ரஜத் பட்டிதர், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமீசன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்

Advertisement:

Related posts

அமமுகவின் 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Gayathri Venkatesan

திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம்: எல்.முருகன்

Niruban Chakkaaravarthi

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்!

Karthick