நள்ளிரவில் கொள்ளை: 24 மணி நேரத்தில், கைது செய்த காவல்துறை!

நெல்லை அருகே நள்ளிரவில் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த இடையன்குடி அருகே,…

நெல்லை அருகே நள்ளிரவில் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த இடையன்குடி அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியர் சைலஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 51 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து உபரிநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்ததில், தென்காசி மாவட்டம் தட்டான்பட்டியை சேர்ந்த பெஞ்சமின், அவரது மனைவி காளீஸ்வரி மற்றும் பெஞ்சமினின் தம்பி ஈசாக் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் 51 சவரன் நகை, 31 ஆயிரம் பணம் மற்றும் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.