நிறுவனத்தின் பணிகளைச் செம்மையாகத் தொடர்ந்து மேற்கொள்ளத் தமிழக அரசால் ஒரு புதிய தலைமை பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்ள தரமணியில் சுமார் 15.25 ஏக்கரில், அரசு எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்பட தயாரிப்பு உட்பட திரைத்துறையில் உள்ள பல் பிறிவுகளான தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் எழுத்து துறை எனப் பல துரைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசால் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி துறைகளில் உள்ள நுணுக்கங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதையே தன் முதன்மை நோக்கமாகக் கெண்டு இயங்கி வருகிறது. எனவே நிறுவனத்தின் பணிகளைச் செம்மையாகத் தொடர்ந்து மேற்கொள்ளத் தமிழக அரசால் ஒரு புதிய தலைமை பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







