கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி யானையை பிடிக்க ஆபரேஷன் பாகுபலி என்ற பெயரில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். யானையை பிடிப்பதற்காக பொள்ளாச்சி ஆனைமலை முகாமில் இருந்து 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டன.
ஊருக்குள் இருந்து சிறுமுகை அடர்ந்த வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றுள்ளதால், அதற்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியும், மயக்க ஊசி செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர், “ஆபரேஷன் பாகுலியை” 10நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.







