பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கண்டன தெரிவித்து சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது குறிப்பாக பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி தெரு பகுதியில் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், உயிர் காக்கும் மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த கோரியும், செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க கோரி, வருமான வரி வரம்புக்கு வராத அனைத்து குடும்பங்களுக்கும் ஆறு மாத காலத்திற்கு ரூ 7500 வழங்க கோரி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.







