மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
https://twitter.com/ChennaiTraffic/status/1756358653412888751
மேலும் அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் இடது புறம் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம்.
உத்தமர் காந்தி சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் திருமலை பிள்ளை ரோடு வழியாக ஜெமினி மேம்பாலம் சென்றடையலாம். மற்ற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட வழி பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







