முக்கியச் செய்திகள் தமிழகம்

மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிப்பு

தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடை வெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.

மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (13.10.2021) மட்டுமே. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத் திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்ப துடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இனவெறி தாக்குதல்: மைதானத்தை விட்டு வெளியேறிய ஜெர்மனி வீரர்கள்

Gayathri Venkatesan

வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்: இறையன்பு தகவல்

Ezhilarasan

’இளவரசே, அதற்குள் விடைபெற முடியாது’-வந்தியத்தேவனை உறுதிப்படுத்திய கார்த்தி

Gayathri Venkatesan