இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை : பணிகள் தொடக்கம்..!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே  இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது.  ஓசூர்…

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே  இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு – கர்நாடகா இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது.  ஓசூர் – பொம்மசந்திரா இடையே பெருந்திரள் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை

இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க முன்மொழிந்து அம்மாநிலம் தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் ஏற்கனவே மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பியிருந்தது.

அண்டை மாநிலத்தில் உள்ள பகுதியை, அம்மாநில அரசுடன் கலந்தாலோசித்து பெருநகரப் பகுதிக்கு விரிவுபடுத்தலாம் என கடிதத்தில் தெரிவித்திருந்தது.  இதற்கு இசைவு தெரிவிக்கும் வகையில் பெங்களூரு மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கலாம் என கர்நாடக அரசும் குறிப்பிடப்பட்டிருந்தது

கர்நாடகாவின் பொம்மசந்திரா மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து ஒசூர்  வெறுமனே 20.5 கிமீ தொலைவில்தான் உள்ளது.  இந்த 20.5 கிமீ தொலைவில் 11.7 கிமீ கர்நாடகா மாநிலத்திலும், மீதமுள்ள 8.8 கிமீ தமிழ்நாட்டிலும் உள்ளது.  இரண்டு இடங்களையும் இணைக்கும்பொது மாநிலங்கள் போக்குவரத்து அமைப்புக்கான திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.