மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம்; முதலமைச்சர், மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திறந்து வைத்தனர்

சென்னை, நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னை நந்தனத்தில் சென்னை மெட்ரோ ரயில்…

சென்னை, நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர்.

சென்னை நந்தனத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் ரூபாய் 365 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. புதிய தலைமை அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3.90 லட்சம் சதுர அடியில், 365 கோடி ரூபாய் செலவில், புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சி.எம்.ஆர்.எல் பவன் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலகத்தில், 12 மாடிகளுடன் ஒரு கட்டடமும், தலா ஆறு மாடிகளுடன் இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இக்கட்டிடத்தில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்களின் குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களுக்கான வாடகை தளம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த அலுவலகத்தில் மெட்ரோ ரயில் இயக்கம், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் ‘கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை விரிவுப்படுத்தப்பட்டு செயல்பட உள்ளது.

அத்துடன் நுழைவு வாயில் பகுதியில் பழங்கால கிணறு தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. அதில் பெண்கள் தண்ணீர் இறைத்து குடங்களில் எடுத்து செல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அண்ணா சாலை வழியாக செல்லும் பொதுமக்களை இது பெரிதும் கவர்ந்து வருகிறது.

சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சராசரியாக தினசரி 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.