Skip to content
January 02, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » metro project report to be submitted to tamil nadu government on 15th july interview with metro managing director
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மெட்ரோ திட்ட அறிக்கை, ஜீலை 15-ம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் – மெட்ரோ நிர்வாக இயக்குனர் பேட்டி

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, ஜீலை 15-ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ.…

Author Avatar

Web Editor

June 28, 20235:33 pm 15th JulyCoimbatoreMaduraiMetro Managing DirectorMetro Project ReportsubmittedTamil Nadu Governme

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, ஜீலை 15-ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட பணி நடைபெற உள்ளது தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். முன்னதாக மதுரை வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவில், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ குழுவினர் ஆய்வு நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ திட்ட நிர்வாக இயக்குனர் சித்திக், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்த அறிக்கை ஜீலை 15-ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மதுரை மெட்ரோ திட்ட பணிகள் 30 கி.மீ., என வரையறுத்த நிலையில் 31 கி.மீ. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்தக்கடை- திருமங்கலம் இடையே 18 ரயில் நிலையங்கள் என்பது 27 ரயில் நிலையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது. மதுரை மெட்ரோ ரயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என சித்திக் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கம் – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

By Web Editor January 2, 2026

பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு மீது வேன் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

By Web Editor January 2, 2026

“உட்கட்சி பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது” – ஜோதிமணி எம்.பி!

By Web Editor January 2, 2026

“ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை” – அன்புமணி வலியுறுத்தல்!

By Web Editor January 2, 2026
#ट्रेंडिंग हैशटैग:15th JulyCoimbatoreMaduraiMetro Managing DirectorMetro Project ReportsubmittedTamil Nadu Governme

Post navigation

Previous Previous post: பட்டமளிப்பு விழா – ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது!!
Next Next post: பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading