செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிகல்வித்துறை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவித்துள்ளது.

பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு. அரசு உதவி பெறும் துவக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத்தேர்வு விடுமுறை 26.09.2026 முதல் 04.10.2026 வரை எனத் தெரிவிக்கப்பட்டு 05.10.2026 திங்கட்கிழமை அன்று அனைத்துவகைப் பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகள் திறக்கும் நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாட்களை வழங்கி மதிப்பெண்களை உரிய பதிவேடுகளில் / EMIS-ல் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு உதவி பெறும் வகுப்பு மேலும், விஜயதசமி அன்று அரசு, துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1-ஆம் மாணவர்களின் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.