மேகதாது விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – தமிழ் நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்…!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ் நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

மேகதாது பிரச்சினை மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு, சட்டரீதியான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை.

தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் கருதி கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும். வேளாண் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி அதிமுக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.