வடகொரியாவுக்கு முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர்

வடகொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான்-ஹூய் நியமிக்கப்பட்டுள்ளார். வடகொரியாவில் நீண்டகாலமாக தூதரகப் பணிகளை மேற்கொண்டு வந்த சோ சான்-ஹூய், அந்நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் பெண் ஆவார். ஏற்கெனவே…

வடகொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான்-ஹூய் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகொரியாவில் நீண்டகாலமாக தூதரகப் பணிகளை மேற்கொண்டு வந்த சோ சான்-ஹூய், அந்நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் பெண் ஆவார். ஏற்கெனவே இவர் வெளியுறவுத் துறை இணையமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.  தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரீ சான் – குவானுக்குப் பதிலாக சோ சான்-ஹூய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சோ சான்-ஹூய் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர். அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையின்போது கிம்முக்கு சோ நெருங்கிய உதவியாளராக இருந்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் ஹனோய் உச்சி மாநாட்டிக்கு கிம்முடன் சோ  சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.