அரசு அதிகாரிகளுக்கு சபாநாயகம் கலங்கரை விளக்கம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

அரசு அதிகாரிகளுக்கு பி.சபாநாயகம் ஐஏஎஸ் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சபாநாயகம் சென்னையில் நேற்று தனது நூறாவது…

அரசு அதிகாரிகளுக்கு பி.சபாநாயகம் ஐஏஎஸ் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சபாநாயகம் சென்னையில் நேற்று தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார். இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எழுத்தாளர் ரவி தமிழ்வாணன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். பின்னர், சபாநாயகத்திடம் ஆசி பெற்றனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து இந்திய ஆட்சிப் பணியில் மக்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு.சபாநாயகம் ஐ.ஏ.எஸ். அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, அவரது ஆட்சியியல் பங்களிப்பைப் போற்றினேன். நூற்றாண்டு காணும் அவர் அரசு அதிகாரிகளுக்குக் கலங்கரை விளக்கம்! எனப் பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.