மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நியூஸ்7 தமிழ் நேரலையில் இந்த விழா ஒளிபரப்பப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும் (ஏப். 19), திக் விஜயம் நேற்றும் (ஏப். 20) நடைபெற்று முடிவடைந்தது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப். 21) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் நடைபெறவுள்ளது.மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரலையில் காண: