மதுரை சித்திரை திருவிழாவின் 2வது நாளான இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து விழாவின் 2வது நாளான இன்று காலை மீனாட்சி சுந்தரேசுவரர் பச்சை பட்டு அணிந்து வீதி உலா வந்தனர். மீனாட்சி சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வரும் 14ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 16ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








